அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகையின் அடுத்த அதிரடி..!

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறும் நடிகை ஸ்ரீரெட்டி, அண்மையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், நடிகை ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும் என கருத்து கூறியிருந்தார். தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது எனவும் அவர் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு தன்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமென கூறினார். உடனே செய்தியாளர்கள் முன்னிலை செருப்பால் அடித்துக்கொண்டு நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.