மனைவிய அடித்து தொங்க விட்டு அதை வீடியோ வரதட்சனை கேட்ட கொடூர கணவன்

உபி மாநிலம் ஷாஜஹான்புரில் கட்டிய மனைவியை அடித்து கொடுமை படுத்தி சீலிங்கில் தொங்க விட்டு அதை வீடியோவும் எடுத்து அந்த வீடியோவை மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பி வரதட்சனை கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மனவைியிடம் 50 ஆயிரம் பெற்றோரிடம் வாங்கி வருமாறு கணவர் கூறியுள்ளார். மனைவி மறுத்ததை தொடர்ந்து பெல்ட்டால் சரமாரியாக தாக்கியுள்ளார். அடி தாங்க முடியாமல் மனைவி சுய நினைவிழந்ததும் அவரது துப்பட்டாவை வைத்து சீலிங்கில் கட்டி தொங்க விட்டுள்ளார்.

தொங்க விட்டதோடு இதை அவரது செல்போனில் பதிவு செய்து சினிமா பாணியில் வில்லன்கள் செய்வது போன்று மனைவியின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.

”பாரு உங்க பொண்ண, நான் கேட்ட பணத்த தரல இந்த மாறி தான் கொடும படுத்துவேன்” என பகிரங்கமாக மிரட்டி அந்த வீடியோவை அனுப்பியுள்ளார்.

கணவர் மற்றும் அவரது உறவினர்கள் தலைமறையாகியுள்ளதால் போலிசார் அவர்களை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மனைவி இது குறித்து ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

”நான் படிக்காததால் எனது வாழ்கையே நாசமாகிவிட்டது. 50 ஆயிரம் கேட்டு என்னை மிரட்டினார். நான் வாங்கி தர முடியாது என்று கூறியதால் என்னை பெல்ட்டால் அடித்தார் பின்னர் நான் சுய நினைவை இழந்தேன் சுய நினைவு வந்த பார்த்த போது சீலிங்கில் தொங்கிக் கொண்டிருந்தேன்” என மனைவி கூறியுள்ளார்.