சிறுமியை பாலியல் தொல்லை தந்த காமுகன்.. பிரபல நிகழ்ச்சியின் மூலம் வெளிவந்த உண்மை சம்பவம்…

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திவரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. பல வருடங்களாகவே நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி நேரெதிர் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் உண்மை கொடுமைகள் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமையை வெளிகாட்டியுள்ளது.

இக்காணொளியில் வரும் சிறுமி ”தன்னை தன் வீட்டின் அருகில் இருக்கும் கடைக்காரர், சிறப்பு வகுப்பு முடிந்தபின் வீட்டிற்கு திரும்பும்போது, அம்மா உன்னை வீட்டிற்கு கூட்டிவரச் சொல்லியதாக, கடைகாரரின் வீட்டிற்கு சென்று கண்ணை கட்டிவிட்டு பாலியல் தொல்லை தந்தார்” என அழுது சொல்லும் போது மனதை உருக்கியுள்ளது. சுமார் 45 நிமிடங்களாக அந்த வீட்டில் என்னை வைத்திருந்து கொடுமைபடுத்தினார் என்றும் கூறியுள்ளார் சிறுமி.

சமீபகாலமாகவே பெண்குழந்தைகளுக்கு சிலரின் வெறிச்செயல் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இது தொடர்பாக புகார் கொடுக்கும்போது வேறொரு காரணம் சொல்லி வருகிறார் அந்த கடைக்காரர். இதுதொடர்பாக பொலிசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தான் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று சிறுமியின் தாய் கூறியுள்ளார்