காமசாஸ்திரம் கூறும், கல்யாண பெண்ணிடம் இருக்க வேண்டிய 10 லட்சணங்கள்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இதில் கடந்த சில நூற்றாண்டுகளாக தான் ஜாதக கட்டங்கள் எல்லாம் பார்க்க படுகின்றன. அதற்கு முன்னர் அந்த ஆண் அல்லது பெண் குணாதிசயங்கள், பண்புகள் பார்த்து தான் தேர்வு செய்தனர்.

திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆணிடம் இந்தந்த லட்சணங்கள் இருக்க வேண்டும், பெண்ணிடம் இந்தந்த லட்சணங்கள்! இருக்க வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இல்லற வாழ்வில் இணையப் போகும் பெண்ணிடம் இருக்க வேண்டிய 10 லட்சணங்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்…

லட்சணம் #1

பூமி போன்ற பொறுமை இருக்க வேண்டும், குழந்தைகளை நன்கு வளர்க்க தெரிந்திருக்க வேண்டும்.

லட்சணம் #2

காதல், கருணை, பாசம், அனைத்தும் கலந்து கணவனுடன் நெருக்கமான உறவில் பிணைத்திருக்க வேண்டும்.

லட்சணம் #3

பெரியவர்களை உபசரிக்க அறிந்திருக்க வேண்டும், அவர்களது அறிவுரைகளை ஏற்கும் பண்பிருக்க வேண்டும், குடும்ப நலனுக்காக சுய நலத்தை விட்டுக் கொடுக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்.

லட்சணம் #4

உலக நடப்புகள் குறித்து அறிந்திருக்க வேண்டும், சமூகத்தில் குடும்பத்தின் மதிப்பை உயர்த்தும் அளவு புத்திக் கூர்மை பெற்றிருக்க வேண்டும்.

லட்சணம் #5

உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரிடமும் சரிசமமாக நல்ல பண்புகளுடன் பழக தெரிந்திருக்க வேண்டும்.

லட்சணம் #6

சமூக வேலைகளுடன் சேர்த்து, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் அறிந்திருக்க வேண்டும்.

லட்சணம் #7

சமூக வேலைகளுடன் சேர்த்து, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் அறிந்திருக்க வேண்டும்.

லட்சணம் #8

குடும்ப வாழ்வில் நலம் பெற நல்ல அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், அறிவுரைகள் கூற வேண்டும்.

லட்சணம் #9

குடும்ப வாழ்வில் நலம் பெற நல்ல அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், அறிவுரைகள் கூற வேண்டும்.

லட்சணம் #10

கடினமான காலத்தில், ஆணுக்கு பக்கபலமாக இருந்து அரவணைத்து செல்ல வேண்டும்.